000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கௌதமபுத்தர் |
300 | : | _ _ |a பௌத்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a திருமாலின் அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படும் புத்த பகவான் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தர் திருமாலின் தசாவதாரங்களில் ஒருவராக கருதப்படுகிறார். இதுகுறித்து புராணங்களில் செய்தியுள்ளது. அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது. மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா: அசுரர்கள் மிகுந்த தவவலிமையுடையவர்களாய் திகழ்ந்தார்கள். அதனால் மிகுந்த வரங்களையும் பெற்று வளம், ஆற்றல், மரணமின்மை உள்ளவர்களாக வாழ்ந்தார்கள். அசுரர்களின் இந்நிலை தேவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் திருமாலின் உதவியை நாடினர். மாயாவாதத்தாலேயே அசுரர்களை வெல்ல முடியும் என்ற எண்ணங் கொண்ட விஷ்ணு ஞானகுருவின் வடிவான புத்ததேவன் உருக்கொண்டு அசுரர்களிடம் குருவாக தோன்றி, உலகின் மாயையும், நிலையாமை பற்றியும், பற்றினால் உண்டாகும் துன்பம் பற்றியுமான தனது மாயா தத்துவங்களை எடுத்துரைத்தார். சிவபக்தியில் சிறந்த அசுரர்களை நோக்கி தெய்வநோக்கம் என்பது வல்லவர்களுக்குத் தேவையான ஒன்றல்ல என்பதையும் அசுரர்கள் எல்லா வல்லமையும் ஏற்கனவே பெற்ற போது தெய்வத்தின் துணையை அவர்கள் நாடுவது நல்லதல்ல என்பதையும் போதித்தார். புத்த போதனையை திரிபுர அசுரர்கள் மேற்கொண்டனர். சிவசிந்தனையும் அவர்கள் மனதை விட்டு அகன்றது. இவ்வாறு புத்தரைப் பற்றி புராணங்கள் கூறும் கதை இங்கு சிற்ப வடிவமாக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a புத்தர், கௌதம புத்தர், பௌத்தமுனி, தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில் சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.7831901 |
915 | : | _ _ |a 79.13123578 |
995 | : | _ _ |a TVA_SCL_000387 |
barcode | : | TVA_SCL_000387 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |